/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'மாஜி' படைவீரர்களுக்கு தொழில் கடன்
/
'மாஜி' படைவீரர்களுக்கு தொழில் கடன்
ADDED : ஏப் 08, 2025 06:34 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். தொழில் துவங்க விரும்புவோர் www.exwel.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சிறப்பு வழிநடத்துதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் படைவிலகல் சான்று, நல அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றம் வங்கிபுத்தகம், விண்ணப்பதாரரின் புகைப்படும் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர் அலுவலகம் 04146-220524 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

