/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.37.20 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.37.20 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.37.20 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.37.20 லட்சம் வர்த்தகம்
ADDED : செப் 30, 2025 08:00 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று முன்தினம் மக்காச்சோளம் 1,500 மூட்டை, நிலக்கடலை 30, எள் 15, கம்பு 3 மூட்டை என 1,548 மூட்டைகள் விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,279, நிலக்கடலை 6,875, எள் 5,725, கம்பு 3,385 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் நேற்று மொத்தமாக 37 லட்சத்து 20 ஆயிரத்து 822க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளம் 80 மூட்டைகள், ஆமணக்கு ஒரு மூட்டை என மொத்தம் 81மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,183, ஆமணக்கு 6,211 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 851 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் கமிட்டியில் மக்காச்சோளம் 156 மூட்டைகள், நெல் 140, கம்பு 55, எள், உளுந்து தலா ஒரு மூட்டை என மொத்தம் 353 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக மக்காச்சோளம் 2,250 ரூபாய், நெல் 2,285, கம்பு 3,700, எள் 7,500, உளுந்து 5,800 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 117 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.