/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.99.58 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.99.58 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.99.58 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.99.58 லட்சம் வர்த்தகம்
ADDED : மே 06, 2025 12:09 AM

கள்ளக்குறிச்சி, ;கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 99.58 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கமிட்டிக்கு, எள் 1,000 மூட்டை, மக்காச்சோளம் 110, கம்பு 25, வேர்க்கடலை 20, உளுந்து 15, தட்டை பயறு, ராகி,பச்சை பயறு தலா ஒரு மூட்டை என மொத்தம் 1,173 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
சராசரியாக, ஒரு மூட்டை எள் 9,414 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,313, கம்பு 2,681, வேர்க்கடலை 6,554, உளுந்து 5,259,தட்டை பயிறு 3,129, ராகி 3,499, பச்சை பயறு 6,129 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில்மொத்தமாக 99 லட்சத்து 58 ஆயிரத்து 287 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம்
மார்க்கெட் கமிட்டியில் எள் 56 மூட்டை, மக்காச்சோளம் 25, ஆமணக்கு ஒரு மூட்டை மற்றும் விரலிமஞ்சள் 60 மூட்டை, உருண்டை மஞ்சள் 8, பனங்காலி மஞ்சள் 2 மூட்டை என 100 மூட்டை மஞ்சளுடன்மொத்தம் 172 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சராசரியாக ஒரு மூட்டை எள் 11,791,மக்காச்சோளம் 2,370, ஆமணக்கு 6,123 மற்றும் விரலி மஞ்சள் 12,754, உருண்டை 11,500, பனங்காலி 23,002ரூபாய்க்கு என மொத்தமாக 14 லட்சத்து 71 ஆயிரத்து 672 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம்
மார்க்கெட் கமிட்டியில் நெல் 177 மூட்டை, எள் 71, கம்பு 27, உளுந்து 6 மூட்டை என மொத்தம் 281மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சராசரியாக நெல் 1,905, எள் 9,856, கம்பு 2,609,உளுந்து 6,585 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 12 லட்சத்து ஓராயிரத்து 96க்கு வர்த்தகம் நடந்தது.

