/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயி கவுரவ நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு
/
விவசாயி கவுரவ நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 10, 2025 12:56 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி உதவி திட்டத்தில் மாற்றம் இருந்தால் இசேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடக்கிறது.
இந்த பணியை மகளிர் திட்ட பணியாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இறப்பு, வாரிசு சான்று பெறுதல், விற்கிரையம், தானசெட்டில்மென்ட், பரிவர்த்தனை ஏற்பாடு ஆகியவற்றில் மாற்றம் இருந்தால் இசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
வரும், 12ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ள ஜமாபந்தி நிகழ்ச்சியில், உரிய சான்றுடன் கூடிய பட்டா மாற்றம் செய்ய மனு அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.