/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
/
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
ADDED : மே 11, 2025 04:13 AM
கள்ளக்குறிச்சி: அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 27 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 3 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி 430 இடங்கள், திருக்கோவிலுார் 300 இடங்கள், ரிஷிவந்தியம் 380 இடங்கள் உள்ளன.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டபடிப்பில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வரும் 27 ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
மேலும் கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு கல்லுாரி உதவி மையங்களில் திங்கள் முதல் வெள்ளி கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, 044-24343106/24342911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.