ADDED : மே 13, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலிவுநிலை குறைப்பு நிதி வழங்கப்பட உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 2025-26 ஆம் ஆண்டிற்கு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் நலிவுநிலை குறைப்பு நிதி வழங்கப்பட உள்ளது.இந்த நிதி உணவு பாதுகாப்பு, வாழ்வாதார தொழில் நடவடிக்கைகள் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்காக வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டாரத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

