/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திறந்த நிலையில் குடிநீர் கிணறு கம்பி வேலியால் மூடப்படுமா?
/
திறந்த நிலையில் குடிநீர் கிணறு கம்பி வேலியால் மூடப்படுமா?
திறந்த நிலையில் குடிநீர் கிணறு கம்பி வேலியால் மூடப்படுமா?
திறந்த நிலையில் குடிநீர் கிணறு கம்பி வேலியால் மூடப்படுமா?
ADDED : மார் 23, 2025 10:03 PM

கள்ளக்குறிச்சி : அணைகரைகோட்டாலத்தில் பொது குடிநீர் கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வேலியால் மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைகோட்டாலம் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களின் தண்ணீர் தேவைக்காக அய்யனார் கோவிலுக்கு அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொது கிணறு வெட்டப்பட்டுள்ளது.
தினமும் மின்மோட்டார் மூலம் இறைக்கப்படும் தண்ணீரினை பொதுமக்கள் பலர் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
இந்த பொதுகிணற்றின் மேற்பகுதி திறந்த நிலையில் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் கிணற்றுக்குள் செல்கிறது. மேலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் தண்ணீரில் மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குடிநீர் கெடும் நிலை உள்ளது.
எனவே, இரும்பு கம்பி மூலம் கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.