/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டேங்கர் லாரி மீது கார் மோதல்: 8 பேர் படுகாயம்
/
டேங்கர் லாரி மீது கார் மோதல்: 8 பேர் படுகாயம்
ADDED : நவ 16, 2025 11:38 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே முன்னே சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் குப்பன், 43; டிரைவர். இவர் டேங்கர் லாரியை சென்னையிலிருந்து திருச்சி நோக்கி ஓட்டி வந்தார்.
நேற்று காலை 10.45 மணியளவில் டேங்கர் லாரி உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக்உசேன்பேட்டை அருகே சென்றபோது, சமயபுரம் கோவிலுக்கு சென்ற இணோவா கார் டேங்கர் லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் டிரைவரான திண்டிவனம் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்த வடிவேல்லு,37; காரில் சென்ற திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த அருணகிரி மனைவி தனலட்சுமி, 27; அருணகிரி, 34; ஜெயபாண்டியன் மனைவி பேச்சியம்மாள், 65; சுந்தர்ராஜ் மனைவி சுசிலா, 60; செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி நாகஜோதி, 63; விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த விஜய் ஆனந்த் மனைவி மகாலட்சுமி, 43; சங்கர் மனைவி ஜெகதாம்பாள,44 ;உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

