/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கார் மோதி மினி டெம்போ கவிழ்ந்து விபத்து
/
கார் மோதி மினி டெம்போ கவிழ்ந்து விபத்து
ADDED : பிப் 21, 2025 05:10 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கார் மோதி மினி டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த கிடாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 44; டிரைவர். இவர் மினி டெம்போ வாகனத்தில், இயற்கை உணவகத்திற்கு தேவையான 2 லட்சம் ரூபாய் மதிப்பில், கற்றாழையை ஏற்றி கொண்டு, ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.
நேற்று மாலை 5:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையில் பு.மாம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், அவரது மினி டெம்போ மீது மோதியது. இதில் மினி டெம்போ பின்பக்க டயர் வெடித்து சாலையில் கவிழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக ராஜ்குமார் மற்றும் மோதிய காரில் பயணித்தவர்கள், காயங்கள் இன்றி, உயிர் தப்பினர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.