/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரயில்வே கேட் மீது கார் மோதி சேதம் 2 ரயில்கள் பாதியில் நிறுத்தம்
/
ரயில்வே கேட் மீது கார் மோதி சேதம் 2 ரயில்கள் பாதியில் நிறுத்தம்
ரயில்வே கேட் மீது கார் மோதி சேதம் 2 ரயில்கள் பாதியில் நிறுத்தம்
ரயில்வே கேட் மீது கார் மோதி சேதம் 2 ரயில்கள் பாதியில் நிறுத்தம்
ADDED : பிப் 21, 2026 04:56 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே கார் மோதிய விபத்தில் ரயில்வே கேட் சேதமடைந்ததால், இரண்டு ரயில்கள் 45 நிமிடங்களுக்கு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே பரிக்கல் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த பாதை வழியாக நேற்று முன்தினம் 9:30 மணிக்கு வந்த அடையாளம் தெரியாத கார் ரயில்வே கேட் மீது மோதியதுடன், நிற்காமல் அங்கிருந்து சென்றது. இதில், ரயில்வே கேட் சேதமானது. இதனால், அவ்வழியாக செல்லும் ரயில்கள் கேட்டை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
உடன் நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் விரைவு ரயில், சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே துறையினர் எச்சரித்து நிறுத்தினர். தொடர்ந்து சேதமடைந்த ரயில்வே கேட் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 45 நிமிடங்களுக்கு பின் கேட் சரிசெய்யப்பட்டு, அதன்பின் ரயில்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இச்சம்பவத்தால் 2 ரயில்கள் பாதி வழித்தடத்திலேயே நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, ரயில்வே கேட்டை சேதப்படுத்தி நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

