/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லாரியில் பைக் மோதி தச்சு தொழிலாளி பலி
/
லாரியில் பைக் மோதி தச்சு தொழிலாளி பலி
ADDED : செப் 07, 2025 11:05 PM
சின்னசேலம்: சின்னசேலம் அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பாபு மகன் முத்துக்குமார், 21; இவர் சின்னசேலம், விஜயபுரம் பகுதியில் உள்ள தச்சு பட்டறையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு, தன்னுடன் பணி செய்யும் விஜய் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்றார்.
பைக்கை முத்துக்குமார் ஓட்டினார். இந்திலி, ஜே.ஜே., நகர் அருகே சென்ற போது பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்பக்கம் பைக் மோதியது. இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த சின்னசேலம் போலீசார் முத்துக்குமாரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.