/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு கிராமத்தினர் மோதல் 11 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது
/
இரு கிராமத்தினர் மோதல் 11 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது
இரு கிராமத்தினர் மோதல் 11 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது
இரு கிராமத்தினர் மோதல் 11 பேர் மீது வழக்கு; 2 பேர் கைது
ADDED : செப் 25, 2024 06:45 AM
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே இரண்டு கிராம சிறுவர்களுக்கு இடையே கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோத தகராறில், இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த ஆற்காடு கிராமத்தில் கடந்த 22ம் தேதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கபடி விளையாடினர். பக்கத்து கிராமமான ஏ.கூடலுார் சிறுவர்களும் பங்கேற்றனர்.
இதில் இரண்டு கிராம சிறுவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் விலகி விட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
23ம் தேதி இரவு 8:00 மணி அளவில் ஏ.கூடலுார் கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் சுப்ரமணி, 20; லட்சுமணன் மகன் பிரேம்குமார், 30; ராமு மகன் சலீம், 20, உள்ளிட்ட 10 பேர் ஆர்காடு காலனிக்குள் சென்று நியாயம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது.
இதில், ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், அவரது மனைவி ராஜலட்சுமி, சவுந்தர்ராஜன் காயம் அடைந்தனர். இது குறித்து இரு தரப்பினரும் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் அரகண்டநல்லுார் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப் பதிந்து ஏ.கூடலுர் சுப்ரமணி, பிரேம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.