/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகன சோதனை: 24 பேர் மீது வழக்கு
/
வாகன சோதனை: 24 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 02, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு போக்குவரத்து விதி மீறிய 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வேகமாக வாகனம் ஓட்டியது, 3 பேர் அமர்ந்து ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது என 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.