/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சீட்டு விளையாடிய 5 பேர் மீது வழக்கு
/
சீட்டு விளையாடிய 5 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 21, 2024 10:22 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே புள்ளித்தாள் விளையாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அணைகரைக்கோட்டாலம் அய்யனார் கோவில் பின்புறம், ரோடுமாமாந்துாரை சேர்ந்த சர்க்கரை மகன் சிவா,42; கள்ளக்குறிச்சி விளாந்தாங்கள் சாலையை சேர்ந்த குப்பன், ரோடுமாமாந்துாரை சேர்ந்த கொளஞ்சி, அய்யம்பெருமாள், குதிரைச்சந்தலை சேர்ந்த முருகேசன் ஆகிய 5 பேரும் புள்ளித்தாள் விளையாடியது தெரிந்தது. உடன் 5 பேர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, அதில், சிவாவை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.1,500 பணம் மற்றும் புள்ளித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.