/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பினர் மோதல் 6 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பினர் மோதல் 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 17, 2025 11:17 PM
மூங்கில்துறைப்பட்டு: ராவுத்தநல்லூரில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 6 பேர் மீது வடப்பொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டு மகன் பரத், 21; என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் நிதிஷ்குமார், 24; என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்வதாக கூறி ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே வருமாறு அழைத்துள்ளார்.
இதில் பரத்துக்கு ஆதரவாக விஷ்ணு, ரவியும், நிதீஷ் குமாருக்கு ஆதரவாக ஹரிதாஸ், தனுஷ், மணிகண்டன், செல்லதுரை, ரஞ்சித் ஆகியோர் சமாதானம் பேசும் போது மீண்டும் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பரத் கொடுத்த புகாரின் பேரில் வடப்பொன்பரப்பி போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.