/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2024 11:18 PM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பழைய வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகன் காசிநாதன், 48; அவரது உறவினர் பரமசிவம், இருவரும் பழங்கூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
எதிரில் பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ஏழுமலை, 27; பைக்கை மோதுவது போல் ஒட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினராக மாறி ஆதரவாளர்கள் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இது தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் காசிநாதன், ஏழுமலை உட்பட 7 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.