/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 19, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, -விளம்பார் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52; அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி. இருவருக்குமிடையே வாகன விபத்து தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
கடந்த 17ம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், பாஸ்கர், பாலாஜி, செந்தில், சக்திவேல், தினேஷ், சதீஷ், ராஜா ஆகிய 7 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.