/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவரை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
/
முதியவரை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
ADDED : செப் 25, 2024 06:47 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் முதியவரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் தங்கவேல், 50. இவரது மகன் மாரியாப்பிள்ளை; மருமகள் அம்சவள்ளி. இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் அம்சவள்ளி கோபித்துக் கொண்டு, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சவள்ளியின் தந்தை வெங்கடாசலம், அவரது மகன் ஆகியோர் கடந்த 22ம் தேதி சைக்களில் சென்ற தங்கவேலை வழிமறித்து திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடாசலம் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.