/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவிக்கு வெட்டு கணவர் மீது வழக்கு
/
மனைவிக்கு வெட்டு கணவர் மீது வழக்கு
ADDED : அக் 05, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மனைவியை வெட்டிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பெருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன், 75; மனைவி பூபதி, 65; இவர், கடன் அதிகமான தால், பெங்களூரு சென்று வேலை செய்து கடனை அடைக்கலாம் என கணவரை அழைத்தார். இதனால் ஆத்திரமடைந்த கோடீஸ்வரன் மனைவி பூபதியை கத்தியால் தாக்கினார்.
புகாரின் பேரில் கோடீஸ்வரன் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.