UPDATED : மே 01, 2026 05:11 PM
ADDED : மே 01, 2026 04:31 PM
கள்ளக்குறிச்சி: பொற்படாக்குறிச்சியில் ஓட்டுக்காக பொதுமக்களுக்கு பணம் வழங்கியது தொடர்பாக மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பொற்படாக்குறிச்சி கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக கடந்த மார்ச் 22ம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில், நீர்வளத்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் பொற்படாக்குறிச்சிக்கு சென்றனர். அலுவலர்களை பார்த்ததும் அடையாளம் தெரியாத அரசியல் கட்சியினர் 5 பேர் பணத்தை துாக்கி எரிந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து கட்சியினர் வீசி சென்ற 36 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
