/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறில் தாக்குதல் 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
/
முன்விரோத தகராறில் தாக்குதல் 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
முன்விரோத தகராறில் தாக்குதல் 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
முன்விரோத தகராறில் தாக்குதல் 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
ADDED : ஆக 06, 2025 12:29 AM
சின்னசேலம் : காட்டனந்தல் கிராமத்தில் முன் விரோத தகராறில் தாக்கி கொண்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர். சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பழனிவேல், 48; இவருக்கும் அவரது உறவினரான கிருஷ்ணமூர்த்தி, 49; என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், 4 பேர் காயம் அடைந்தனர். இது குறித்த இரு தரப்பு புகாரின் பேரில், மல்லிகா, வினோத், அம்பிகா, கிருஷ்ணன், ஜெயக்கொடி, பழனிவேல் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிந்த கீழ்க்குப்பம் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.