/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : நவ 06, 2024 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே பெண்ணைத் தாக்கிய தாய், மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தியாகதுருகம் அடுத்த சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி ஜோதி, 39; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி நிர்மலா, 46; இவரது வீட்டில் உள்ள முருங்கை மரத்திலிருந்து தழை ஜோதி வீட்டில் கொட்டியது. ஜோதி கேட்டபோது ஆத்திரமடைந்த நிர்மலா மற்றும் அவரது மகன் தேவா, 25; ஆகியோர் சேர்ந்து ஜோதியை தாக்கி கொலை, மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீசார் நிர்மலா, தேவா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.