/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் ஊர்வலத்தில் ரகளை 20 பேர் மீது வழக்கு
/
விநாயகர் ஊர்வலத்தில் ரகளை 20 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 31, 2025 04:08 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வென்மார் கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் விநாயகர் சிலையை விஜர்சனம் செய்வதற்காக அன்பரசன், 52; மற்றும் ஊர் மக்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ், 49; வீட்டின் அருகே ஊர்வலம் சென்ற போது, சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செந்தில், ஞானசேகர், ஆனந்த் உள்ளிட்ட 7 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 15 நபர்கள் அன்பரசை தாக்கினர். இந்த மோதலில் சுரேஷின் தாய் கஜலட்சுமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அன்பரசன், சக்திவேல் உள்ளிட்ட 13 பேர் திரும்பித் தாக்கினர்.
இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.