/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு
/
மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு
ADDED : செப் 29, 2025 01:06 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
சங்கராபுரம் அடுத்த மயிலம்பாறை பஸ் நிறுத்தத்தில் ரோட்டரி கிளப் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பஸ் ஏறிச்செல்லும் அவல நிலைக்கு ஆளாகினர். மீண்டும் பயணியர் நிழற்குடை கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், வடசெட்டியந்தல், மயிலாம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மயிலாம்பாறை பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக, வடசெட்டியந்தலை சேர்ந்த செல்வராஜ், ரமேஷ், ஜெயசங்கர், பெரியசாமி மற்றும் மஞ்சப்புத்துாரை சேர்ந்த ராமசாமி உள்ளிட்ட 25 பேர் மீது சங்கராபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.