/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 29 பேர் மீது வழக்கு
/
நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 29 பேர் மீது வழக்கு
நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 29 பேர் மீது வழக்கு
நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்த 29 பேர் மீது வழக்கு
ADDED : அக் 21, 2025 09:36 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தீபாவளி தினத்தன்று அதிக அளவிலான பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு குறைக்க தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுக்களை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதேபோல், தியாகதுருகம் மற்றும் உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் தலா 4 பேர் மீதும், சின்ன சேலம், கச்சிராயபாளையம், கரியாலுார், எலவனாசூர்கோட்டை, வரஞ்சரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா 2 பேர் மீதும், சங்கராபுரம், திருக்கோவிலுார், மணலுார்பேட்டை, திருப்பாலபந்தல், பகண்டை கூட்ரோடு, ரிஷிவந்தியம் மற்றும் வடபொன்பரப்பி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 29 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.