/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : டிச 13, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த குடியநல்லுாரைச் சேர்ந்தவர் காந்தி மனைவி அம்சவள்ளி, 36; அதே ஊரைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் செல்வம், 27; இருவரது குடும்பத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த மாதம் 28ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த செல்வம், இவரது சகோதரர் சின்ராசு, சித்தலுார் செல்வராசு ஆகியோர் அம்சவள்ளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் செல்வம் உள்ளிட்ட மூன்று பேர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.