/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
/
நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 12, 2025 10:09 PM
கள்ளக்குறிச்சி; நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா,. இவர் நீலமங்கலம் எல்லையில் உள்ள புஞ்சை நிலத்தை அளந்து தரும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதன்படி, நீதிமன்ற ஊழியர் பரித்தா,35;வை நீதிமன்ற ஆணையாராக நியமித்து போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளந்து கொடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் பரித்தா நீலமங்கலத்தில் இடத்தை அளக்க சென்றபோது சிறுவங்கூரைச் சேர்ந்த மனோகரன்,65; இவரது சகோதரர் மணி,52; மற்றும் வேளாங்கண்ணி,42; ஆகியோர் சேர்ந்து பரித்தாவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து நீதிமன்ற ஊழியர் பரித்தா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் மனோகரன், மணி, வேளாங்கண்ணி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.