/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலி வாரிசு சான்றிதழ் மூலம் நிலம் கிரையம் வரஞ்சரம் அருகே 3 பேர் மீது வழக்கு
/
போலி வாரிசு சான்றிதழ் மூலம் நிலம் கிரையம் வரஞ்சரம் அருகே 3 பேர் மீது வழக்கு
போலி வாரிசு சான்றிதழ் மூலம் நிலம் கிரையம் வரஞ்சரம் அருகே 3 பேர் மீது வழக்கு
போலி வாரிசு சான்றிதழ் மூலம் நிலம் கிரையம் வரஞ்சரம் அருகே 3 பேர் மீது வழக்கு
ADDED : நவ 27, 2024 09:49 PM
கள்ளக்குறிச்சி ;வரஞ்சரம் அருகே போலி வாரிசு சான்றிதழ் மூலம் நிலத்தை விற்றது மற்றும் கிரையம் பெற்றது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுப்ரமணியன்,56; தந்தை ஆறுமுகம் அதே பகுதியில் 2 ஏக்கர் 41 சென்ட் நிலத்தை கிரையம் பெற்று அனுபவித்து வந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு இறந்து விட்டார். ஆறுமுகம் அனுபவித்த இடத்தை யாருக்கும் எழுதி வைக்கவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்புராயன் என்பவர், இறந்த ஆறுமுகத்திற்கு ஒரே வாரிசு என போலியாக வாரிசு சான்று உருவாக்கி, வாணவரெட்டியில் உள்ள 2.41 ஏக்கர் நிலத்தில், 1.50 ஏக்கர் இடத்தை குதிரைச்சந்தலை சேர்ந்த பெரியசாமி, கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்த அசோக்குமார் ஆகியோருக்கு கிரையமாக கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, பெரியசாமி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரும் வேறு நபர்களுக்கு 1.50 ஏக்கர் இடத்தை விற்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த சுப்ரமணியன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அரியாங்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்புராயன், குதிரைச்சந்தலை சேர்ந்த கருப்பன் மகன் பெரியசாமி, கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் அசோக்குமார் ஆகிய 3 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.