/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
ADDED : டிச 09, 2024 07:20 AM
தியாகதுருகம், | தியாகதுருகம் அருகே முன்விரோத தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆறுமுகம், 30; விவசாயி. இதே ஊரைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் அய்யனார், 26; இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 7ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது அய்யனார் மற்றும் அவரது ஆதரவாளர்களான வி.புதுார் கோவிந்தசாமி மகன் குமரேசன், 23; சித்தலுார் கோவிந்தராஜ் மகன் ஆதி, 22; ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில், அய்யனார், குமரேசன், ஆதி ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.