/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
ADDED : மார் 22, 2025 09:11 PM
சின்னசேலம் : பாக்கம்பாடி கிராமத்தில் தகராறில் வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 45; அதே பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 19ம் தேதி இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நவநீதகிருஷ்ணன் தனது உறவினர்களுடன் ராஜசேகர் வீட்டிற்குள் புகுந்த அவரை தாக்கியதுடன், வீட்டில் இருந்த 'டிவி', பிரிட்ஜ், மிக்ஸி, பைக் உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினார்.
இது குறித்த புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன், மாதேஸ்வரி, மாயக்கண்ணன் ஆகிய 3 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.