/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 20, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக கணவன் உட்பட இரு குடும்பத்தினர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் அரவிந்த், 29; இவர் கடந்த ஜூன் மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்தார்.
அச்சிறுமி கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்த மகளிர் ஊர்நல அலுவலர் செல்வி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த வேலாயுதம் மகன் அரவிந்த், 29; இவரது தாய் பச்சையம்மாள், தந்தை வேலாயுதம், சிறுமியின் தந்தை பாலு ஆகிய 4 பேர் மீது போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.