/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டு மனை தகராறு 4 பேர் மீது வழக்கு
/
வீட்டு மனை தகராறு 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 18, 2025 04:55 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டு மனைத் தகராறில் 4 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல் சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் மனைவி ஆஷாம்மா, 40; இவர், கடந்த 2008ம் ஆண்டு சிராஜ் பரிதா என்பவரிடம் வீட்டுமனை வாங்கி அதில் சுற்றி வேலி மற்றும் ஒரு பகுதியில் கொட்டகை போட்டிருந்தார்.
நேற்று அதே பகுதியைச் சேர்ந்த மக்புல், இவரது மனைவி பர்ஜனா, தங்கை மற்றும் பொரசப்பட்டு முனியன் ஆகியோர் சேர்ந்து வேலியை அகற்றி ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஆஷாம்மா அளித்த புகாரின் பேரில் மக்புல் உட்பட 4 பேர் மீது வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.