/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமி திருமணம் 'போக்சோ'வில் 5 பேர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம் 'போக்சோ'வில் 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 24, 2024 07:49 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை காவல் உட்கோட்ட பகுதியில் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் 5 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்தனர்.
உளுந்துார்பேட்டை பகுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை திருமணங்கள் அவ்வப்போது நடக்கிறது.
திருமணமான சில மாதங்களில் கர்ப்பமடையும் சிறுமிகள், பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
அங்கு பரிசோதிக்கும் டாக்டர்கள் சம்மந்தப்பட்ட சிறுமியின் விபரங்களை சமூக நல விரிவாக்க அலுவலரிடம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, குழந்தை திருமணம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, சமூக நல விரிவாக்க அலுவலர் அய்யம்மாள் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, வெவ்வேறு தினங்களில், வெவ்வேறு பகுதிகளில்சிறுமிகளை திருமணம் செய்த, ஈஸ்வரகண்ட நல்லுார் சுப்ரமணியன் மகன் ராஜேஷ், களவனுார் சந்திரசேகர் மகன் வேலன், ஏ.குமாரமங்கலம் சீனு மகன் கருணா, கிளியூர் வெங்கடேசன் மகன் சுபாஷ், கேசவன் மகன் மணிகண்டன் ஆகிய 5 பேர் மீது உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.