/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை திட்டிய 6 பேர் மீது வழக்கு
/
பெண்ணை திட்டிய 6 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2025 11:41 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை திட்டியது தொடர்பாக 6 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் மணி மகள் பெரியநாயகி,21; இவர் கடந்த ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் ராகுல்,27; என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, பெரியநாயகி பாதுகாப்பு கேட்டு மனு அளிப்பதற்காக வீட்டிலிருந்து ஆட்டோ மூலம் எஸ்.பி., அலுவலகத்திற்கு புறப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த ராகுலின் தந்தை அன்பழகன் மற்றும் இவரது குடும்பத்தினர் ஆட்டோவை வழிமறித்து பெரியநாயகியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், அன்பழகன், அவருடைய மனைவி செல்வி, உறவினர்கள் ஆனந்த், பிரேமா, குமார், பவுனாம்பாள் ஆகிய 6 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.