/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
/
வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு
ADDED : செப் 17, 2025 12:33 AM
கள்ளக்குறிச்சி'; சின்னசேலத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்தியதாக கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் அசோக்நாத் மனைவி பிரியங்காதாஸ், 28; இருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டது.
மேலும், அசோக்நாத்தின் குடும்பத்தினர், உறவினர்கள் வரதட்சணை கேட்டு பிரியங்காதாஸினை கொடுமைபடுத்தினர்.
இது தொடர்பாக பிரியங்காதாஸ் அளித்த புகாரின் பேரில், கணவர் அசோக்நாத், 38; மாமியார் சந்திரா, 67; உறவினர்கள் பன்னீர்செல்வம், பவித்ரா, பெரியசாமி, தேன்மொழி, பவுன்குமார் ஆகிய 7 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.