/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்சோ சட்டத்தில் ஒருவர் மீது வழக்கு
/
போக்சோ சட்டத்தில் ஒருவர் மீது வழக்கு
ADDED : ஜன 17, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்த நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளனர்.
சின்னசேலம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 15ம் தேதி பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது, சாலையில் இருந்த நாயை பார்த்து சிறுமி பயந்துள்ளார். உடன் அங்கு நின்று கொண்டிருந்த, சின்னசேலத்தை சேர்ந்த வையாபுரி மகன் அம்பாயிரம்,42; என்பவர் பயப்படக்கூடாது என கூறி, சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் அம்பாயிரம் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.