/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
/
தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
ADDED : ஜூன் 10, 2025 10:09 PM
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே சொத்து தகராறில் தம்பியைத் தக்கிய அண்ணன், அண்ணி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 35; இவரது அண்ணன் கிருஷ்ணன், 38; இருவருக்கும் இடையே நிலம் பாகம் பிரிப்பது தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பாக கடந்த 3ம் தேதி ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன், இவரது மனைவி தெய்வானை, 35; ஆகிய இருவரும் சேர்ந்து தமிழரசனை திட்டி, தாக்கினர். காயமடைந்த தமிழரசன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் கிருஷ்ணன், தெய்வானை ஆகிய இருவர் மீதும் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.