/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூதாட்டிக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
/
மூதாட்டிக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
மூதாட்டிக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
மூதாட்டிக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
ADDED : டிச 23, 2024 05:15 AM
கள்ளக்குறிச்சி :  வரஞ்சரம் அருகே மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வரஞ்சரம் அடுத்த அசகளத்துாரை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கலாமணி,62; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிச்சமணி மகன் பரமசிவம் என்பவரது குடும்பத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி பிச்சமணி மகன் சோலமுத்து மற்றும் அவரது சகோதரர்கள் ஒன்று சேர்ந்து, ஆயுதங்களை காண்பித்து கலாமணியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கலாமணி அளித்த புகாரின் பேரில், பிச்சமணி மகன்கள் பரமசிவம், குமார், சோலமுத்து ஆகிய 3 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.