/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு
/
பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 18, 2025 12:31 AM
கள்ளக்குறிச்சி; கூத்தக்குடி கிராமத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷம், 70; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் பாக்கியராஜ் என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்னை உள்ளது.
இந்நிலையில் கடந்த 16ம் தேதி பாக்கியராஜ் தரப்பினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சந்தோஷத்தின் வீட்டினை இடித்தனர். இதை தடுக்க சென்ற சந்தோஷத்தின் மகள் சாரதாவின் புடவையை பிடித்து இழுத்து, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சந்தோஷம் அளித்த புகாரின் பேரில், தங்கவேல் மகன் பாக்கியராஜ், தனபால் மகன்கள் பிரபாகரன், சதீஷ்குமார், முனியன் மகன் காமராஜ் ஆகிய 4 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.