/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பு மோதல் 7 பேர் மீது வழக்கு பதிவு
/
இரு தரப்பு மோதல் 7 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 05, 2025 03:38 AM
கள்ளக்குறிச்சி : வாணாபுரம் அருகே இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட முன்விரோத தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாணாபுரம் பொற்பாலம்பட்டு சேர்ந்தவர் புஷ்பநாதன்,74; இவரது சகோதரர் அம்புரோஸ்,60; இருவருக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2 ம் தேதி தண்ணீர் இறைப்பது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் அம்புரோஸ், ஆரோக்கியராஜ், ரூபன் பிரேம்குமார், மற்றொரு தரப்பில் புஷ்பநாதன், ஆரோக்கியதாஸ், தனுஷ் ஷாமேரி மற்றும் சிறுவன் உட்பட மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.