/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியை திட்டி, தாக்கிய கணவன் மீது வழக்கு பதிவு
/
மனைவியை திட்டி, தாக்கிய கணவன் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 24, 2025 11:16 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த லோகநாதன் மனைவி சந்தியா,26; இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 21 ம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, தனது குடும்பத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பேரணியை சேர்ந்த சரண்யா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து வைத்ததாக கணவர் லோகநாதன் கூறியுள்ளார்.
இது குறித்து கேட்ட மனைவி சந்தியாவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சந்தியா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் லோகநாதன்,33; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.