நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதுபாலப்பட்டு, பழைய பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி, லக்கினாய்கன்பட்டி, மூலக்காடு, பொய்குனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மரவள்ளி அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர். 10 மாத பயிரான மரவள்ளி பராமரிப்பு செலவு குறைவு. வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. களை எடுக்க இயந்திரம் உள்ளது.
அறுவடை சமயத்தில் வியாபாரிகள் நேரில் வந்து, மரவள்ளியை வாங்கி செல்வதால் அறுவடை நாளிலேயே வருவாயும் கிடைப்பதால், விவசாயிகளின் முக்கிய தேர்வாக, இப்பகுதியில் மரவள்ளி உள்ளது.