/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முத்துமாரியம்மன், புத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
/
முத்துமாரியம்மன், புத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
முத்துமாரியம்மன், புத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
முத்துமாரியம்மன், புத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED : ஆக 18, 2025 12:26 AM

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மாரியம்மன் கோவில்களில் சாகை வார்த்தலை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அரகண்டநல்லுார், கொட்டாமேடு, தென்பெண்ணை ஆற்று ஒட்டி அமைந்திருக்கும் புத்துமாரியம்மன் மற்றும் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அமைந்திருக்கும் முத்து மாரியம்மன் கோவில்கள் மிகவும் பழமையானது. இக்கோவிலின் ஆண்டு பெருவிழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 11:00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பாடானது. பக்தர்கள் கூழ் குடம் எடுத்து வந்து மணிலா மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் இருக்கும் முத்து மாரியம்மனுக்கு படையலிட்டனர்.
பின்னர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் புத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரத்துடன் கூழ் படையலிடப்பட்டு மகா தீபாரதனை நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. சுவாதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து, கோவிலை அடைந்தது.
இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.