/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரங்கநாதர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
/
அரங்கநாதர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
ADDED : ஜன 03, 2024 12:00 AM

ரிஷிவந்தியம் : ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் ராப்பத்து 10வது நாள் நிகழ்ச்சி விடையாற்றி உற்சவத்துடன் நேற்று முடிந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த ஆதிருவரங்கத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த டிச., 13ம் தேதி பகல்பத்து உற்சவமும், டிச., 23ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து, ராப்பத்து உற்சவம் தொடங்கி தினமும் நடந்த நிலையில், கடைசி நாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது.
இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாளுக்கு ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பெருமாள் சுவாமிக்கு பல வண்ண மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பெருமாளுக்குரிய பாடல்களை பாடி, விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 16ம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.