ADDED : ஆக 22, 2026 03:31 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டு ்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் பத்மஜா ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ன் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 1ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சி கே.பி.ஆர். நகரில் நேற்று நடைபெற்ற இப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பத்மஜா, பணிகளை விரைந்து முடிக்கவும், 100 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
