
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சுமதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர் பயிற்றுனர் கோகிலா முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தலைமையாசிரியர் இளவரசு சிறப்புரையாற்றினார். விழாவில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளியின் நுாற்றாண்டு சிறப்புகள் குறித்து பேசினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் கொளஞ்சி, தேவி, தமிழ்செல்வி, பர்வீன், சாமுண்டீஸ்வரி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி, முன்னாள் மாணவர்கள் நடேசன், முருகன், சுப்புராஜ், மணிகண்டன், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

