/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சென்ட்ரிங் தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி
/
சென்ட்ரிங் தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி
ADDED : அக் 07, 2024 11:12 PM

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே சென்ட்ரிங் தொழிலாளி, ரயில் பாதையில் இறந்து கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த பாதுார் ஊராட்சி, காந்தி நகரை சேர்ந்தவர் நாராயணன் மகன் சங்கர்,35; சென்ட்ரிங வேலை செய்து வந்தார். திருமணமாகாதவர். இவர் நேற்று முன்தினம், காந்தி நகர் ரயில் பாதையில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார், சங்கர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கர் இறந்த அதே இடத்தில், அவரது தந்தை நாராயணன் 20 ஆண்டிற்கு முன் ரயிலில் அடிபட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.