/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டி.எல்.எம்., தொழிற்பயிற்சி நிலையத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி முகாம்

ADDED : பிப் 01, 2024 06:27 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் டி.எல்.எம்., தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் சீட் டிவிசன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் நிதி உதவியுடன் திருக்கோவிலூர் டான் இன்ஸ்டியூட் ஆப் ரூரல் டெவலப்மென்ட் நிறுவனம் சார்பில் தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தபட்ட சமூகத்தை சார்ந்தவர்களுக்காக நடத்தப்பட்ட முகாம் 3 நாட்கள் நடந்தது. இதில் பயிற்றுனர்கள் சகாதேவன், கோகிலா, சுமதி ஆகியோர் தையல், ஆரி, சனல் பை தயாரித்தல் உள்ளிட்ட சிறுதொழில் பயிற்சி அளித்தனர்.
பயிற்சி நிறைவில் நடந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு டி.எல்.எம்., இணை இயக்குனர் டாக்டர்.ஹெலன்ஜி ராபர்ட்ஸ் தலைமை தாங்கினார். தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மானக்சா முன்னிலை வகித்தார். டான் இன்ஸ்டியூட் பார் ரூரல் டெவலப்மென்ட் நிர்வாக இயக்குனர் சுந்தர், பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு 30 பேருக்கு சான்றிதழ் வழங்கினார். டான் இன்ஸ்டியூட் பார் ரூரல் டெவலப்மென்ட் நிர்வாகி அம்புளிமோகன் நன்றி கூறினார்.