ADDED : மார் 15, 2026 03:28 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சட்டசபை தேர்தலையொட்டி மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கொடி அணிவகுப்புக்கு எஸ்.பி., அரவிந்த் தலைமை தாங்கினார். தமிழகத்தில் ஓரிரு நாட்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவித்தததும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி ஓட்டு அளிக்கும் வகையில் கொடி அணி வகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் துவங்கிய அணி வகுப்பில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு உள்ளூர் போலீசாருடன் இணைந்து கச்சேரி சாலை, நான்முனை சந்திப்பு, சேலம் சாலை மற்றும் கவரைத்தெரு வழியாக மீண்டும் மந்தைவெளி வரை நடந்து சென்றனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் போலீசார் ஊர்க்காவல் படையினர், மத்திய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.
