/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள்: சி.இ.ஓ., வாழ்த்து

ADDED : டிச 23, 2024 05:26 AM

சங்கராபுரம் : பொரசப்பட்டு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்ததையடுத்து சி.இ.ஓ., விடம் வாழ்த்து பெற்றனர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், சங்கராபுரம் அடுத்த பொரசப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கூடைப்பந்து, ஹாக்கி, பேட்மிட்டன் ஆகிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தனர். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பொரசப்பட்டு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலெக்டர் பிரசாந்த் மற்றும் சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிமணி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, சங்கராபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனுவாசன், பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.